நடத்தை விதிகளை மீறியதற்காக ரிஷப் பண்ட்க்கு 24 லட்சம் அபராதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐபிஎல்லில் நடத்தை விதிகளை மீறியதற்காக ரிஷப் பண்ட் மற்றும் டெல்லி அணியை சேர்ந்த வீரர்களுக்கு பிசிசிஐ கடும் அபராதம் விதித்தது. நடப்பு ஐபிஎல் சீசனில், 16 ஆவது போடியாக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கொல்கத்தா டெல்லி இடையிலான போட்டியில் கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலாவதாக பந்து வீசிய டெல்லி அணியை சேர்ந்த வீரர்கள் பந்து வீச வெகு நேரம் எடுத்துக் கொண்டதால் அந்த அணியின் ரிஷப் பண்ட்க்கு 24 லட்சமும், அணியை சேர்ந்த மற்ற வீரர்களுக்கு 6 லட்சம் அல்லது அவர்கள் போட்டி கட்டணத்திலிருந்து 25 சதவீதம் அபராதம் விதித்து பிசிசிஐ அறிவித்துள்ளது. இதே சீசனில் டெல்லி அணி 2 ஆவது முறையாக விதிமீறல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Night
Day