விளையாட்டு
இளம்வீரர்கள் அடங்கிய சென்னை அணி... 6வது கோப்பையை வெல்லுமா CSK...
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில?...
சென்னை பிரைம் வாலிபால் லீக் போட்டியில் ஹைதராபாத் பிளாக் ஹாக்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி டூஃபான்ஸ் அணி வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் அகமதாபாத் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது. சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் பிரைம் வாலிபால் லீக் தொடர் கடந்த 15 ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் டெல்லி டூஃபான்ஸ், அகமதாபாத் டிபன்டர்ஸ், பெங்களூரு டார்படோஸ், சென்னை பிளிட்ஸ், ஹைதராபாத் பிளாக் ஹாவ்க்ஸ் உள்ளிட்ட அணிகள் களமிறங்கி விளையாடி வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி டூபான்ஸ் அணி ஹைதராபாத் பிளாக் ஹாவ்க்ஸ் அணியை 15-11, 13-15, 15-9, 15-11 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது. இதனை தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு டார்பிடோஸ் அணி அகமதாபாத் டிஃபென்டர்ஸ் அணியை 17-15, 15-13, 15-13 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தியது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில?...
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்க?...