விளையாட்டு
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை...
சென்னை ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். 22வது லீக் ப?...
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். ராஜ்கோட்டில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். இந்திய அணியில் அனில் கும்ப்ளே 500 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதற்கு முன்னர் இலங்கை அணி வீரர் முத்தையா முரளிதரன்,ஆஸ்திரேலியா அணி வீரர்கள் ஷேன் வார்னே, கிளென் மெக்ராத், நாதன் லயன், இங்கிலாந்து வீரர்கள் ஜேம்ஸ் ஆன்டர்சன், ஸ்டுவர்ட் பிராட், வெஸ்ட் இண்டீஸ் வீரர் வால்ஷ் ஆகியோர் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். 22வது லீக் ப?...
திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை அமலாக்கத் துறை அலுவ?...