அழகே அஜித்தே... அசரடிக்கும் ‘AK’ யங் லுக்...

எழுத்தின் அளவு: அ+ அ-

'குட் பேட் அக்லி' படத்தின் கடைசி நாள் படபிடிப்பின் போது நடிகர் அஜித்குமாருடன் எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்... அமர்க்களமாக யங் லுக்கில் இருக்கும் அஜித்குமாரின் புகைப்படங்கள் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையயுலகினரையும் அசரடித்து வருகிறது. கடவுளே அஜித்தே என்ற கோஷத்தை துறந்து, அழகே அஜித்தே என அனைவரும் கொண்டாடி வரும் அஜித்தின் யங் லுக் குறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித்குமார். தற்போது மகிழ்திருமேனியின் 'விடாமுயற்சி' மற்றும் ஆதிக் ரவிச்சந்திரனின் 'குட் பேட் அக்லி' என இரண்டு படங்களில் பேக் டு பேக் நடித்துள்ளார் அஜித்குமார். இதில், படம் ஆரம்பிக்கும் போதே பொங்கல் வெளியீடு என சொல்லி தொடங்கப்பட்ட படம்தான் குட் பேட் அக்லி.. ஆனால் நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்த விடா முயற்சி படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது படக்குழு... 

இவ்விரு படங்களில் ஒருபடம் நிச்சயமாக வெளியாகும் என்பதால் எப்படியும் வரும் பொங்கல் தல பொங்கல்தான் என உற்சாகத்துடன் உள்ளனர் ரசிகர்கள்.. அவர்களுக்கு மேலும் கொண்டாட்டத்தை கொடுக்கும் விதமாக வெளியாகியிருப்பதுதான் 'குட் பேட் அக்லி' படத்தின் நியூ லுக்...

அஜித்தின் தீவிர ரசிகரான இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படம், அறிவிப்பு  வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது. அதற்கு காரணம் அஜித்தின் லுக்தான்.. பல ஆண்டுகளாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிலேயே அஜித்தை கண்டு பழகிய ரசிகர்கள், அவரை ப்ளாக் ஹேர் ஸ்டைலில் வித்தியாசமான லுக்கில் பார்க்க மாட்டோமா என ஏங்கி தவித்து வந்தனர். அவர்களின் ஆசையையும், ஏக்கத்தையும் போக்கும் வகையில் குட் பேட் அக்லீ திரைப்படத்தில் 3 வித லுக்குகளில் அஜித்தை நடிக்க வைத்துள்ளார் ஃபேன் பாய் ஆதிக் ரவிச்சந்திரன்.. 

இப்படத்தில் அஜித்தின் 2 லுக்குகள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது 3வது லுக்கையும் வெளியிட்டு ரசிகர்களை அசரடித்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். இதுதொடர்பாக தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆதிக் ரவிச்சந்திரன், 'குட் பேட் அக்லி' படத்தில் அஜித் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தெரிவித்துள்ளார். அத்துடன், அஜித்தின் யங் லுக் புகைப்படத்தயும், நடிகர் சுனிலுடன் அவர் பேசிக் கொண்டிருக்கும் வீடியோவையும் 'அமர்க்களம்' பாடலுடன் பதிவிட்டுள்ளார். 

உடல் எடை குறைந்து, ப்ளாக் ஹேர் ஸ்டைலுடன், யங் லுக்கில் அமர்க்களம் படத்தில் பார்த்தது போல் இருக்கும் அஜித்தை கண்ட ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரும் தங்களது சந்தோஷத்தை சமூக வலைதள பக்கங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
மாஸ் ஹீரோக்களை பொறுத்த வரை அவர்களின் தோற்றம் முதல் ஹேர் ஸ்டைல் வரை பெரிய மாற்றம் ஏதும் இருக்காது. ஆனால், அந்தக் கருத்து அஜித்தை பொறுத்தவரை மாறும். அவரது ஒவ்வொரு மாற்றமும் ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்படும். கடவுளே அஜித்தே என வைப் செய்து கொண்டிருந்த ரசிகர்களை, அழகே அஜித்தே என கொண்டாட வைத்துள்ளது 'குட் பேட் அக்லி' படத்தில் அஜித்தின் யங் தோற்றம்.

Night
Day