எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஏழை எளிய மக்கள், மாணவ, மாணவிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதரம் மேம்பட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா.. பார் போற்றும் மாண்புமிகு அம்மாவின் முத்தான திட்டங்கள் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.
என்கிறது குறள்.
"முறைமையோடு ஆட்சி செய்து மக்களைக் காப்பாற்றும் மன்னவன், அம் மக்களுக்குத் தெய்வம் என்று சொல்லப்படும் உயர்நிலையிலே வைத்து மதிக்கப்படுவான்" என்பதே இதன் பொருள்.
ஒரு ஆட்சித் தேருக்கு வடமாக இருப்பது ஒரு மன்னனின் நற்சிந்தனைகளும், அறிவாற்றலும், வீரம் பொருந்திய செயல்களுமே ஆகும். அப்படி தமிழகத்தை பொற்கால ஆட்சியால், களப்பிரர்கள் ஆட்சியை தனது வலிமையால் ஒழித்து ஆட்சித் தேரை மக்களுக்காக இழுத்தவர் புரட்சித் தலைவி அம்மா. ஏழை எளிய மக்களுக்கு எத்தனை எத்தனை எழுச்சி மிகு திட்டங்கள், மாணவ சமுதாயத்தை மேன்மை அடைய கல்வியில் கொண்டுவந்த சீர்திருத்தங்கள் என எத்தனையோ பொற்கால புரட்சி சிந்தனைகள் அம்மாவிடம் இருந்ததால், தமிழகமும், தமிழ் மக்களும் பெற்ற நன்மைகள்தான் எத்தனை எத்தனை.
ஒவ்வொரு துறையிலும் எளிய விளிம்புநிலை மனிதர்களின் கண்ணீரை தொட்டு துடைக்கும் சுட்டு விரலாக திட்டங்கள், அவை 100 விழுக்காடு செயல்படுகிறதா என முதலமைச்சராக இருந்து, கண்ணும் கருத்துமாய் கவனித்து தவறுகள் இருந்தால் களையவும், திருத்தங்கள் கூறுவதும் என மக்கள் நலன் ஒன்றையே தனது உயிர் மூச்சாக கொண்டவர் புரட்சித்தலைவி அம்மா.
இந்திய சமூகம் சாதிக் கட்டுமானங்களை உள்ளடக்கியது. ஆண்டான்-அடிமை பேதம், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு என்றெல்லாம் சாதிய அடுக்குகள் சாமானியனை மூடி மறைக்கின்றன. சாதியக் கொடுமையும் வர்க்க பேதமும் இந்திய சமூகத்தில் கறையாக படிந்துள்ள நிலையில், அந்த கறையை துடைத்தவர் புரட்சித் தலைவி அம்மா.
மிதிவண்டி
மாணவ, மாணவியருக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ், அவர்களது தன்னம்பிக்கையை உயர்த்தினார். குறிப்பாக கிராமப்புறங்களில் பேருந்து வசதி இல்லாத இடங்களில் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவியருக்கு இது வரப்பிரசாதமாக அமைந்தது.
சாதி வன்மம் குறிப்பிட்ட இனத்தவரை வீதிகளில் நடக்கக்கூடாமல் செய்த விதியை அகற்றி, அங்கு பாதை அமைத்து, மாணவ சமுதாயத்தினரை தன்னம்பிக்கையுடன் நடமாட வைத்தார் புரட்சித்தலைவி அம்மா.
மடிக்கணினி
மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கி அவர்களின் அறிவுத் திறனை அகலமாக்கினார். இதனால், பல லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற்றார்கள். குறிப்பாக ஏழை எளிய விளிம்புநிலை மாணவ மாணவியர்.
வெளிநாட்டு கல்வி
தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்காக அரும்பணியாற்றிய மாண்புமிகு அம்மா, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் ஏழை மாணவ - மாணவிகளும், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை பெறும் வகையில் 'வெளிநாடு சென்று உயர்கல்வி கற்கும் திட்டத்தை' அறிமுகப்படுத்தி, செயல்படுத்தினார். இந்த திட்டத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் 25 மாணவ - மாணவிகள் மற்றும் 5 பேராசிரியர்கள் அயல்நாடு சென்று, ஒரு பருவம் வரை உயர்கல்வி பயின்று வந்தனர். இத்திட்டத்திற்காக ஒவ்வொருவருக்கும் தலா 15 லட்சம் ரூபாயை அம்மா தலைமையிலான தமிழக அரசு வழங்கியது.
ஒவ்வொரு தேர்தலையும் மனதில் கொண்டு, திட்டங்களை அறிவிக்கும் தலைவர்கள் மத்தியில், அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்காக, தொலைநோக்குத் திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்துவதோடு, அத்திட்டத்தின் பலன் விளிம்பு நிலை மக்களையும் எட்டுகிறதா? என்பதில் மாண்புமிகு அம்மா காட்டிய முனைப்பு வேறு எந்த தலைவரிடமும் இல்லாத தனிச்சிறப்பு. 'மக்களால் நான் மக்களுக்காவே நான்' என்ற தாரக மந்திரத்தோடு, அல்லும் பகலும் அயராது உழைத்து வந்த மாண்புமிகு அம்மாவின் ஆற்றல் மிகு தலைமையில், அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்ந்தது.
மாண்புமிகு அம்மாவின் முத்தான திட்டங்களால், தலைசிறந்து விளங்கியது தமிழ்நாடு.
அம்மா உணவகம்!
விலைவாசி உயர்வின் தாக்கத்தில் இருந்து ஏழை, எளிய மக்கள் விடுபட்டு மலிவு விலையில் தரமான உணவை வயிறார உண்ணும் வகையில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. பின்னர், இந்தத் திட்டம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் விரிவுபடுத்தப்பட்டது. அதன் பிறகு தமிழகத்தில் உள்ள பிற மாநகராட்சிப் பகுதிகளிலும், சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனையிலும் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. குறைந்த செலவில் வயிறு நிரம்ப சாப்பிட்டு தங்கள் பசியை ஆற்றினர் விளிம்புநிலை மக்கள்.
மக்கள் வாயால் வாழ்த்துவதை நம்ப முடியாது. ஆனால், அவர்கள் வயிறு வாழ்த்தினால் அது சிறப்பான வாழ்த்தாக இருக்க முடியும் என புரட்சித் தலைவர் ஒரு படத்தில் வசனம் பேசுவார். அதை வாழ்க்கையிலும் கடைபிடித்தார். புரட்சித் தலைவரின் அடியொற்றி தன் ஆட்சிப் பயணத்தை தொடர்ந்த புரட்சித் தலைவி அம்மாவும், ஏழை மக்கள் வயிறார உண்ண அம்மா உணவகத்தை ஏற்படுத்தினார்.
அம்மா குடிநீர்
பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்கிட வேண்டும் என்ற நோக்கில் இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 1 லிட்டர் அளவு பிளாஸ்டிக் பாட்டில்களாக, சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களிலும், மாவட்டங்களில் உள்ள பேருந்து நிலையங்களிலும் பாட்டில் ஒன்று 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
அம்மா உப்பு
தமிழ்நாடு உப்பு நிறுவனத்தால் மூன்று வகைகளில் தயாரிக்கப்பட்டுள்ள "அம்மா உப்பு' பாக்கெட்டுகளின் விற்பனையை 2014ம் ஆண்டு புரட்சித் தலைவி அம்மா தொடங்கி வைத்தார்.
அம்மா காய்கறி கடை
வெளிச்சந்தையில் தாறு மாறாக உள்ள காய்கறிகளின் விலையை கட்டுக்குள் வைக்கவும், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பசுமையான காய்கறிகளை அளிக்கவும் 30 பண்ணை பசுமை நுகர்வோர் கூட்டுறவு காய்கறி கடைகளை புரட்சித் தலைவி அம்மா தொடங்கி வைத்தார்.
அம்மா மருந்தகம்
கூட்டுறவுத் துறையின் சார்பில் நியாயமான விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்திடும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம், நங்கநல்லூர் கூட்டுறவு பண்டகச் சாலையில் அம்மா மருந்தகத்தை புரட்சித் தலைவி அம்மா திறந்து வைத்தார். மேலும், கடலூர், ஈரோடு, மதுரை, சேலம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலும் 9 அம்மா மருந்தகங்களை திறந்து வைத்தார்.
அம்மா சிமெண்ட்
சிமெண்ட் விலையேற்றத்தால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுள்ள மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் சந்தை விலையில் சிமெண்ட் விற்பனை செய்யும் அம்மா சிமண்ட் திட்டத்தைபுரட்சித் தலைவி அம்மா செயல்படுத்தினார். சிமெண்ட் மூட்டைகள் தமிழகம் முழுவதும் 470 கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு மூட்டை ஒன்றுக்கு 190 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் வீடு கட்டுவோர் 100 சதுர அடிக்கு 50 மூட்டைகள் வீதம், அதிகபட்சம் ஆயிரத்து 500 சதுர அடிக்கு 750 மூட்டைகள் வரை சிமெண்ட் பெற்றுக் கொள்ளலாம்.
தங்கும் விடுதிகள்
சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, விழுப்புரம், கோவை ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் மகளிருக்கான 12 அரசு விடுதிகள் ஏற்படுத்தப்பட்டன.
விரைவு பட்டா வழங்கும் திட்டம்
அம்மா விரைவு பட்டா வழங்கும் திட்டம் மூலம், வருவாய்த்துறை அலுவலர்கள் வாரத்திற்கு ஒரு கிராமத்தை தேர்வு செய்து, அங்குள்ள மக்களின் குறைகளுக்கு தீர்வு காண்பார்கள். அரசு விரைவு பட்டா மாறுதல்களுக்காக பல ஆண்டுகாலம் அலைந்து அவற்றை பெறுவதற்கு காலத்தையும் நேரத்தையும் வீணாவதை தடுக்கும் விதமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இப்படி எண்ணற்ற திட்டங்களால் ஏழை எளிய மக்களின் கண்ணீரை துடைத்தவர் புரட்சித் தலைவி