எழுத்தின் அளவு: அ+ அ- அ
விழுப்புரத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற திமுக அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்து, பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். விளம்பர திமுக அரசின் அலட்சியத்துக்கு பதிலடி கொடுத்து அனுப்பப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
தெற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல், கடந்த 30ம் தேதி காரைக்காலுக்கும் - மரக்காணத்துக்கும் இடையே கரையை கடந்த நிலையில், அப்போது வீசிய சூறைக்காற்றாலும், தொடர் கனமழையாலும் வட கடலோர மாவட்டங்களான விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய 4 மாவட்டங்கள் சொல்ல முடியாத அளவிற்கு பெரும் பாதிப்பை சந்தித்தன.
அதிலும் விழுப்புரத்தில் ஃபெஞ்சல் புயலின் கோர தாண்டவத்தால் 10க்கும் மேற்பட்ட ஏரிகள் உடைந்து தண்ணீர் வெளியேறியது. இதனால், பல இடங்களில் தரைப்பாலங்கள் மற்றும் சாலைகள் அடித்து செல்லப்பட்டன. கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் ஏரிகள் உடைப்பால் ஏற்பட்ட காற்றாற்று வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கான குடிசை மற்றும் வீடுகள், பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் ஆகியவை வெள்ள நீரில் மூழ்கியது. எதிர்பாராத இந்த பேரிடரால் குடியிருப்புவாசிகள் மற்றும் விவசாயிகளை கண்ணீர் மல்க கதற வைத்தது.
புயல் கரையை கடந்து இரண்டு நாட்களுக்கு மேலாகியும் மீட்பு பணி மேற்கொள்ளாததால் ஆத்திரம் அடைந்த இருவேல்பட்டு கிராமத்தை சேர்ந்த மக்கள், விழுப்புரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் இறங்கினர். இதனால் அவ்வழியாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், தவலறிந்த வனத்துறை அமைச்சர் பொன்முடி, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, மாவட்ட ஆட்சியர் பழனி, மற்றும் திமுகவினர் உள்ளிட்டோருடன் படைபலத்துடன் சென்றார்.
அப்போது சம்பவ இடத்தில் அமைச்சர் பொன்முடி, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை, ஏலனமாக நினைத்துவாறு, தன்னுடைய காரில் இருந்தபடியே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த மக்கள், தங்களின் குறைகளை கேட்க, காரில் இருந்து கூட இறங்க மாட்டீங்களா எனக் கேள்வி எழுப்பி, அமைச்சர் பொன்முடியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அவர் அமைச்சர் பொன்முடி மீது தரையில் இருந்த சேற்றை வாரி இறைத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதில், காரில் இருந்த அமைச்சர் பொன்முடி, திமுக எம்.எல்.ஏ அன்னியூர் சிவா, கௌதம சிகாமணி ஆகியோரின் முகம், ஆடை உள்ளிட்டவற்றில் சேறு படிந்து அலங்கோலமானது.
சேற்றை வாரி அமைச்சர் பொன்முடி மீது இறைத்தும் ஆத்திரம் தனியாத மக்கள், உடனே சாலையில் அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வேறு வழியில்லாமல், காரில் இருந்து இறங்கிய அமைச்சர் பொன்முடி, மக்களிடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு, பாதிக்கப்பட்ட பகுதிகளை சிறிது நேரம் ஆய்வு செய்துவிட்டு, விட்டால் போதும் என்ற எண்ணத்தில் அவசர அவசரமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
பெண்கள் ஓசி பஸ்ஸில் பயணிப்பதாகவும், கழக உடன்பிறப்புகளை கம்னாட்டி என்று அழைத்தும், பல்வேறு சமயங்களில் நக்கலான பேச்சுகளை வெளிப்படுத்தி வந்த அமைச்சர் பொன்முடி மீது எவ்வித நடவடிக்கையும் திமுக எடுக்காததால், தற்போது அவற்றின் அனைத்திற்கும் சேற்றை வாரி இறைத்து மக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.