யுகாதி திருநாள் - அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இனிய யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இப்புத்தாண்டு, புது வசந்தத்தையும், எல்லா வளத்தையும், நலத்தையும் தரும் ஆண்டாக அமையவேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்தியுள்ளார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள யுகாதி திருநாள் வாழ்த்துச் செய்தியில், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் வாழ்வில் புது வசந்தத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரும் ஆண்டாக இப்புத்தாண்டு விளங்க, அனைவருக்கும் தனது இதயம் கனிந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். 

தமிழகத்தில் பல்லாண்டு காலமாக வாழுகின்ற தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் மொழியால் வேறுபட்டிருந்தாலும், வாழும் இடம் ஒன்று என்ற உணர்வோடு இத்தமிழ் மண்ணில், தங்கள் பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை மங்காது பேணிக்காத்து வருகின்றனர். அதே சமயம் அந்தந்த பகுதிகளில் வாழும் தமிழக மக்களின் பழக்க வழக்கங்களுடன் ஒன்றிணைந்து அவர்தம் இன்ப, துன்பங்களில் பங்கேற்று, மொழி வேற்றுமை பாராமல் சகோதர, சகோதரிகளாய் அன்புடன் வாழ்ந்து வருகின்றனர் என புரட்சித்தாய் சின்னம்மா பெருமிதம் தெரிவித்துள்ளார். 

மேலும், தமிழ்நாட்டில் வாழுகின்ற தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் தொழில், வணிகம், கல்வி, கலை போன்ற பல்வேறு துறைகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவது வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டிற்கு மேலும் பெருமையை சேர்க்கிறது. இந்த ஒற்றுமையும், நட்புணர்வும் மேலும் வலுப்பெறும் ஆண்டாக இப்புத்தாண்டு அமையட்டும் என புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் வாழ்வில் ஒளியேற்றி, புது வசந்தத்தைக் கொண்டுவரும் ஆண்டாக இப்புத்தாண்டு விளங்க வேண்டும் என்றும்,  வளத்தையும், நலத்தையும், வெற்றியையும் தரும் ஆண்டாக விளங்க வேண்டும் என்றும் ஆண்டவனை வேண்டுவதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். இந்நன்னாளில், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை தனது இனிய யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

varient
Night
Day