இந்துஸ்தான் கல்லூரி மாணவி தற்கொலை

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை இந்துஸ்தான் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த மாணவி, கல்லூரியின் 4வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த அனுப்பிரியா என்ற மாணவி, கோவையில் உள்ள இந்துஸ்தான்  கல்லூரியில், பாரா மெடிக்கல் சயின்ஸ் முதலாமாண்டு படித்து வந்தார். மாணவி விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில், கல்லூரியின் 4வது மாடியிலிருந்து திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சீனியர் மாணவியின் ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை அனுப்பிரியா திருடியதால், கல்லூரி முதல்வர் சக மாணவர்கள் மத்தியில் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி கல்லூரியின் 4வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

Night
Day