இறப்பதற்கு முன் சமூக ஆர்வலர் ஜகபர், ஜெயா ப்ளஸ் செய்தித் தொலைக்காட்சிக்கு பேட்டி

எழுத்தின் அளவு: அ+ அ-

கனிம வள கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜகபர் அலி, இறப்பதற்கு முன் கடந்த 10ம் தேதி நமது ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அரசு அதிகாரிகள் மீது சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் கனிம வள கொள்ளை மற்றும் சட்டவிரோத கல்குவாரி குறித்து தொடர்ந்து புகார்கள் அளித்துவந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி, லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்வதற்கு முன் கடந்த 10ஆம் தேதி மாவட்ட கோட்டாட்சியரிடம் கனிமவள கொள்ளை குறித்து மனு அளித்த ஜெகபர் அலி, நமது ஜெயா பிளஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். அதில், சட்டவிரோத கனிமவள கொள்ளை குறித்து பல முறை புகாரளித்தும் அதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல், அரசு அதிகாரிகள் பலர் குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

கனிம வள கொள்ளை குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் உட்பட அனைத்து துறைசார்ந்த அதிகாரிகளிடமும், ஆதாரங்களுடன் சமூக ஆர்வலர் ஜகபர் அலி பலமுறை புகாரளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்ததே, தற்போது அரங்கேறியிருக்கும் படுகொலை சம்பவத்திற்கு காரணமாக அமைந்திருப்பதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Night
Day