கல்குவாரி உரிமையாளர்களால் திட்டமிட்டு கொலை என தகவல்

எழுத்தின் அளவு: அ+ அ-

கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜகபர் கொலை சம்பவத்துக்கு வலுக்கும் கண்டனம்


புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி. சமூக ஆர்வலரான இவர், திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிம வள கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதாரங்களுடன் பல முறை மனு கொடுத்து வந்துள்ளார். கடந்த 17ஆம் தேதி பள்ளிவாசலில் தொழுகை முடித்து தனது இருசக்கர வாகனத்தில் வீடுதிரும்பிய ஜகபர் அலி மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கனிம வள கொள்ளைக்கு எதிராக தொடர்ந்து போராடிய அவர், கடந்த 13 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் பல ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் மனு அளித்திருந்தார். இந்த சூழலில் அடுத்த சில நாட்களில் டிப்பர் லாரி மோதி ஜகபர் அலி உயிரிழந்தது சந்தேகத்தை எழுப்புவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். 

இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், நடந்தது விபத்து அல்ல என்பதும், கல் குவாரி சம்பந்தப்பட்ட நபர்கள் ஜகபர் அலியை திட்டமிட்டு கொலை செய்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

Night
Day