கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு - குண்டர் சட்டம் ரத்து

எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பாக கைது செய்த 18 பேரை, குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை  நீதிபதிகள் சுப்ரமணியம் -ஜோதிராமன் அமர்வு முன்  விசாரணைக்கு வந்தது. அப்போது, கால தாமதமாக குண்டர் சட்டத்தில் அடைத்ததையும், ஆவணங்கள் முறையாக வழங்கவில்லை என்பதையும் முன்வைத்து குண்டர் சட்டத்தை ரத்து செய்ய மனுதாரர் தரப்பு வாதிட்டது.  தொடர்ந்து, இச்சம்பவத்தில் 70 பேர் மரணம், 100-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு என கிராமமே அசாதாரணமாக இருந்ததால் குண்டர் சட்டத்தில் அடைத்ததாக அரசு தரப்பு தெரிவித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 18 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

Night
Day