காதலியைக் கொன்று கால்வாயில் வீசிய காதலன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் காதலியை கழுத்தை நெரித்துக் கொன்று கால்வாயில் வீசிய காதலனை போலீசார் கைது செய்தனர்.


கடந்த 12ம் தேதி காணாமல் போன சீமாபுரியை சேர்ந்த கோமல் என்பவர் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், 5 நாட்களுக்குப் பிறகு சாவ்லா பகுதியில் உள்ள கால்வாயில் கைகள் கட்டப்பட்ட நிலையில், கோமல் சடலமாக மிதந்தார். உடலை கைப்பற்றி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், கோமலை கொன்றது அவருடைய காதலன் ஆஷிப் என்பது தெரியவந்தது. அந்த பகுதியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த ஆஷிப்பை போலீசார் கைது செய்தனர். நீண்ட நாட்களாக பழகி வந்த கோமலுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை கொலை செய்து உடலில் கல்லை கட்டி கால்வாயில் வீசியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Night
Day