சென்னையில் பள்ளி சிறுமியிடம் அத்துமீறல் - வேன் ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் பள்ளி சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட வேன் ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி நாள்தோறும் பள்ளிக்கு ஒப்பந்த வேன் மூலம் சென்று வந்துள்ளார். சிறுமியிடம் வேன் ஓட்டுநர் வினோத் நட்புடன் பழகிவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவரது வீட்டிற்கு சென்ற வினோத், சிறுமியை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டி வந்ததுடன், பலமுறை பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் வேன் ஓட்டுநர் மீது கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்அடிப்படையில் போலீசார், வேன் ஓட்டுநரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day