க்ரைம்
கஞ்சா போதையில் 2 வீடுகள் மீது பெட்ரோல் குண்டுவீச்சு
சென்னை முகப்பேரில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோதே வீடு ஒன்ற?...
சென்னை வியாசர்பாடியில் ரவுடி பீர் பாட்டிலால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த ரவுடி நவீன்குமார் மீது பல்வேறு கொலை வழக்கு உட்பட 6 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வியாசர்பாடி கூட் செட் ரோடு பகுதியில் நவீன்குமார் தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். தகவலறிந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், நவீன்குமாருடன் மது அருந்திய அங்கப்பன், குமரேசன், தமிமுன் அன்சாரி ஆகியோர் நவீன்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. குமரசேரனிடம் தினந்தோறும் நவீன்குமார் மது வாங்கி தரும்படி தொந்தரவு செய்ததால், குமரசேரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை முகப்பேரில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோதே வீடு ஒன்ற?...
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிற?...