எழுத்தின் அளவு: அ+ அ- அ
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக உள்ள ஆனந்த், தன்னை கொல்ல முயற்சித்து வருவதாக அவரது மருமகன் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, ஆனந்த் என்பவர் புதிய தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டார். இவரது மகள் அஸ்வியை, வில்சன் என்பவர் காதலித்து திருமணம் செய்து உள்ளார். இந்தநிலையில் கடந்த 2 மாதமாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், தனது மாமனாருமான ஆனந்த், தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக வில்சன் வெளியிட்ட காணொலியில் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதமாக அம்பத்தூர், செவ்வாய்பேட்டை உள்ளிட்ட இடங்களில் தன்னை கூலிப்படையை வைத்து கொல்ல முயன்றதாகவும், இதுகுறித்து காவல் நிலையங்களில் புகார் அளித்ததாகவும் காணொலியில் வில்சன் தெரிவித்துள்ளார். தான் செல்லும் இடங்களில்
ஆட்களை அனுப்பி பின் தொடர்ந்து கண்காணித்து வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், தமிழக அரசும், காவல்துறையும் தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அந்த காணொலியில் வில்சன் கேட்டுக் கொண்டுள்ளார்.