எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னையை அடுத்த பூந்தமல்லியில் போக்குவரத்து போலீசார் முன்னிலையில், நபர் ஒருவரை, மற்றொருவர் கத்தியால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லி அடுத்த குமரன்சாவடி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில், ஒருவரை கத்தியுடன் மற்றொரு நபர் விரட்டிச் செல்வதாக போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்றபோது, சம்பந்தப்பட்ட குடியிருப்பில் நபர் ஒருவர் கையில் வெட்டுப்பட நிலையில் போலீஸாரை நோக்கி ஓடி வந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற மற்றொரு நபர் போக்குவரத்து போலீசாரின் முன்னிலையிலேயே அந்த நபரை வெட்டினார். இதையடுத்து போலீசார் கத்தியுடன் இருந்த நபரை மடக்கிப் பிடித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், காயம்பட்ட நபரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து, பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, வெட்டுபட்ட நபர் பூந்தமல்லி அடுத்த நூம்பலை சேர்ந்த மோகன்ராஜ் என்பதும், இருவருக்கும் முன்பகை இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.