மனைவி கண்முன்பே ஜவுளிக்‍கடை அதிபர் தலை துண்டித்து கொலை - 4 பேர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசியில் ரேஷன் கடையில் வைத்து மனைவி கண்முன்னே ஜவுளிக்கடை உரிமையாளர் தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டம் காசிமேஜர்புரத்தை சேர்ந்த பட்டுராஜா என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய கணேசன் , இசக்கிமுத்து உள்ளிட்ட 5 பேரை குற்றாலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளிவந்த இவர்களை கொலை செய்ய பட்டுராஜாவின் உறவினர்கள் திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. பட்டுராஜாவின் உறவினர்கள் இசக்கிமுத்துவின் சகோதரரான குத்தாலிங்கம் என்பவரை நேற்று தென்காசி அருகே உள்ள கீழப்புலியூர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் வைத்து அவரது மனைவி தனலட்சுமி முன்பு தலையை துண்டித்து படுகொலை செய்தனர். 

இதனைதொடர்ந்து குத்தாலிங்கத்தின் தலையை பட்டுராஜா கொலை செய்யப்பட்ட காசிமேஜர்புரம் பகுதிக்கு எடுத்து வந்து வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தென்காசி மற்றும் குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கொலையில் தொடர்புடைய ரமேஷ் மற்றும் ஹரிஹரசுதன் ஆகிய இருவரை பிடித்து குற்றாலம் காவல்துறையினர் விசாரித்தனர். இதனை தொடர்ந்து குத்தாலிங்கத்தை கொலை செய்துவிட்டு த​லைமறைவாக இருந்த செண்பகம் மற்றும் மணி ஆகிய 2 பேரையும் தென்காசி போலீசார் கைது செய்தனர். விசாரணையில், ரமேஷ், பட்டுராஜா மனைவியின் தம்பி என்பது தெரியவந்தது.

Night
Day