ஆசிரியர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட விஏஓ - வீடியோ வைரல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆசிரியர் காலில் விழுந்து விஏஓ மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

நாட்றம்பள்ளியை அடுத்த செரக்காயல் நத்தம் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் சாலை அமைத்து தரக்கோரி, கிராம நிர்வாக அலுவலர் மாணிக்கம் என்பவரிடம் சிவாஜி என்ற ஆசிரியர் முன்னிலையில் 25 ஆயிரம் ரூபாயை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு லஞ்சமாக கொடுத்துள்ளனர். பணத்தை பெற்றுக் கொண்ட மாணிக்கம் பணி மாறுதலால் சாலை அமைக்காமல் சென்றதால் பணத்தை திருப்பிக்கொடு என ஆசிரியர் சிவாஜி கேட்டுள்ளார். அதற்கு காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் தன்னை விட்டு விடுங்கள் என விஏஓ கெஞ்சும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Night
Day