தூத்துக்குடியில் பல மாதங்களாக தேங்கியுள்ள மழை நீரால் மக்கள் அவதி

எழுத்தின் அளவு: அ+ அ-


தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்குட்பட்ட இடங்களில் பல மாதங்களாக தேங்கியுள்ள மழை நீரை மாவட்ட நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பூபாண்டியாபுரம் பகுதியில் வீடுகளை விட்டு வெளியே வர முடியாதபடி மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளது. பச்சை நிறமாக மாறி உள்ள நீரில் கொசு உற்பத்தியாகி காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவி வருவதுடன், அந்த தண்ணீரில் நடந்து செல்பவர்களுக்கு காலில் புண்கள் வர துவங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தேங்கியுள்ள அசுத்த நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day